Tuesday, March 24, 2026

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன.

இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மின் விநியோகம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

ஆனால் இந்த மின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img