126
மதுக்கூர் மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு தடை செய்யப்பட்டது.
2 நாட்கள் தடை செய்யப்பட்ட மின்சாரம் நேற்று 11 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.
குறைந்தளவு மின்சாரமே விநியோகம் செய்யப்பட்டதால் அத்தியாவசிய தேவைகளான மோட்டார் தண்ணீர் போன்றவைகள் உபயோகப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் முறையாக கொடுக்கப்படவில்லை எனில் அதிரை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.