Home » அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை…?

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை…?

by admin
0 comment

உடல் வெந்துவிடும் அளவுக்கு தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இந்த உக்கிரத்தை பெரியவர்களே தாங்க முடியாமல் தகிக்கிறார்கள். மென்மையான உடல் அமைப்புக்கொண்ட மாணவர்கள் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தேர்தல் மற்றும் கோடை வெயில் என கூறி அனைத்து பள்ளிகளும் விடுமுறை என்றும், இந்த விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடைப்பெற கூடாது’ என்றும் பள்ளிகளுக்கு தமிழக அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ‘ பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்படும், அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மாணவர்களின் நலனில் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

கோடை விடுமுறையால் கிராமங்களை நோக்கி மாணவர்கள் செல்ல வேண்டும். தங்கள் தாத்தா பாட்டி மற்றும் குடும்பம் சார்ந்த உறவுகளைப் பார்க்க இது வாய்ப்பாக இருக்கும். சமீப காலமாக நம் சமூகத்தில் உறவு முறை தெரியாத, பெற்றோர் படும் கஷ்டம் தெரியாத, பெற்றோர் வளர்ந்த சூழல் அறியாத, முன்னும் பின்னும் அறிந்திடாத சமூகமாக மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள். இது பிற்காலத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும்.

மாணவர்களுக்கு ஓய்வு கொடுக்காமல்  பள்ளி ஆண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பெடுப்பது இன்னும் பல அபாயங்களை உருவாக்கும். தனியார் பள்ளிகளின் முதலிடம், அதிக மதிப்பெண்களைப் பெற வைக்கும் பேராசைக்காக மாணவர்களை வாட்டி வதைப்பதால் சுய சிந்தனையற்ற உயிரினங்களாக மாணவர்களை உருமாற்றி வருகிறார்கள்.

கல்வித்துறையால் அறிக்கை விடப்பட்டும் எந்த பள்ளியும் இதை கண்டுகொள்வதில்லை. அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், எந்த பள்ளியிலும் ஆய்வு செய்யவதில்லை. இவர்களை கடந்துதான் சீருடை அணிந்த மாணவர்கள் கொதிக்கும் வெய்யிலில் சிறப்பு வகுப்புகளுக்கு செல்வார்கள்.  அரசு ஆணையிட்டும் திருந்தாதவர்களை யார் திருத்துவது? என தெரியவில்லை.

இதனை உடனடியாக அதிகாரிகள் கண்காணித்து பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்து விடுமறை அளித்திட வேண்டும், அப்படி தொடர்நது வகுப்புகள் நடத்திடும் பள்ளிகளின் பெயர்கள் நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் ஆதாரத்துடன் பதிவிடப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter