கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினரை அழைத்து எச்சரித்த காவல்துறையினர், இளங்கோவினை விடுவித்தனர். மேலும் தேவாலயத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளை இளங்கோவின் குடுபத்தினர் சரி செய்து தரவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதிரையில் தேவாலயம் சூறை! சிக்கினார் இளங்கோ!
82