மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகசெ. முஹம்மது உமர் அவர்களின் மகனும், மர்ஹும் முகசெ. உதுமான் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது, அபுல் ஹசன், அபூபக்கர், மர்ஹூம் பஷிர் அகமது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது உமர், முஹம்மது ரபீஃக், ஹாஜா மொய்தீன், முஹம்மது புகாரி ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகசெ. முஹம்மது இப்ராகிம் அவர்கள் இன்று காலை வபாஃத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







