Home » அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா !(படங்கள்)

அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா !(படங்கள்)

0 comment

பன்னாட்டு ரோட்டரி சங்க அதிரை கிளையின் 2019-20 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரிச்வே ஹதீஜா மஹாலில் இன்று மாலை நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர் பாபு, மெட்ரோ மாலிக் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

2019-2020 ஆண்டுக்கான புதிய தலைவராக நவாஸ்கான் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்னாள் தலைவர் சம்சுதீன் முறைப்படி இலட்சினை அணிவித்து பணியை ஒப்படைத்தார்.

2018-19 ஆண்டின் அறிக்கையை முன்னாள் செயலாளர் மன்சூர் வாசித்தார். இந்நிகழ்வில் வறுமையால் வாடும் மூன்று பெண்மணிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவின் இடையே புதிய உறுப்பினர்கள் அறிமுக நிகழ்வு நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றும் நபர்களுக்கு கேடயம் மற்றும் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஜெ. நவாஸ் தொகுத்து வழங்கினார். இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் எஸ். சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter