198
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை அணியினரும் மேலநத்தம் MFC அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை வகித்தனர். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை அணி 2- 0 என்ற கோல் கணக்கில் மேலநத்தம் MFC அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(24/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
மார்க்ஸ் FC மன்னார்குடி – SSMG அதிராம்பட்டினம்