85
அதிரையின் பழைமை வாய்ந்த மருத்துவமனையாக கருதப்படும் ஷிஃபா மருத்துவமனை புணரமைக்கப்பட்டு தற்போது புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. நெடுங்காலமாக கண் மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் வாசன் கண் மருத்துவ குழு,கடந்த மாதம் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்து இலவச கண் பரிசோதனையயும் ஆலோசனைகளையும் வழங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை (01-09-2019) ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் வருகை தர உள்ளதால் அதிரையர்கள் இதனை நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.