Saturday, March 21, 2026

சென்னையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழை!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழை.. இன்று சென்னை உள்பட 18 மாவட்டங்களில் சூப்பர் மழை இருக்கு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிளரவில் திடீரென கனமழை பெய்ததால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் ழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில நேற்று நள்ளிரவிலும் திடீரென கனமழை பெய்யத்தொடங்கியது. இன்று காலை பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறுகையில்,. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, தேனி, நீலகிரி, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துககுடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இதனிடையே சென்னை பூந்தமல்லி, தரமணி, அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழையும், சோழவரம், தாமரைப்பாக்கம். திருவள்ளூர் பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் சென்னை டி.ஜி.பி. அலுவலகம், பொன்னேரி, தேவாலா (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), திருவாலங்காடு (திருவள்ளூர்), கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img