கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை கேரளா மாநிலத்தில் பெய்யத் தொடக்கி படிப்படியாய் தமிழகத்திற்குள் வந்தடைந்தது. பொதுவாகவே ஜூன் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் இறுதி வரைக்கும் தென்மேற்குப் பருவ மழை காலங்களாகும்.
இம்முறை தென்மேற்குப் பருவ மழை தமிழகத்திற்கு குறைவாக கிடைத்தாலும், அதிரையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகவே பெய்திருக்கிறது என்று அதிரை வானிலை ஆய்வு மையம் நம்மை தொடர்பு கொண்டு அறிவித்தது.
கடந்த ஜூன் மாதம் முதல் இம்மாதம் செப்டம்பர் இன்றைய தேதி (18-09-2019) புதன்கிழமை வரையிலும் அதிரையில் 36 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கஜாவிற்குப் பிறகு அதிரையை வாட்டி வதைத்த கடும் வெயிலுக்கு மத்தியில், இந்த தொடர் மழை அதிரையர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. தொடர்ந்து இரு வாரங்களாக பெய்து வரும் இம் மழையால் அதிரை நகரம் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளிக்கிறது.