Monday, February 2, 2026

மண்ணடியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. சென்னையில் இரவு மட்டும் 10.4செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் காலை அலுவலகத்திற்கு செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இந்த கனமழை காரணமாக மண்ணடியில் ஐயப்ப செட்டி தெருவில் வசிக்கும் ஜெரினா பானு என்பவரின் வீட்டு சுவர் அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 45 வயது ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மாநகர் முழுதும் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம்போல் காட்சியளித்தது. குறிப்பாக பெசன்ட் நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img