97
பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமக்கும் புத்தக சுமையின் காரணத்தால், எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் அபாயமுள்ளது. என்னடா இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறான் என குழம்பி மண்டையை சொறிவது எனக்கு தெரிகிறது.
சிறு வயது முதலே கல்வி கொடுப்பது என்பது எல்லா நாடுகளிலும் உள்ள சட்ட நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் எல்லாம் நவீன தொழி நுட்ப காரணங்களால் அங்கு ஸ்மார்ட் வடிவிலான (டேப்) வழங்கப்பட்டு அனைத்து பாடங்களையும் கையடக்க கணினியில் பதிவு செய்து விடுகின்றனர், இதனால் ஐந்து பாட புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியதாக உள்ளதால் சுமை இல்லாமல் ஆகி விடுகின்றது.
சரி..சரி… விசயத்தை சொல்லுப்பா என …. நீங்க மனசால மல்லுக்கட்டுறது நன்றாக தெரிகிறது.
சிறு வயதிலேயே அதிக பாரம் கொண்ட புத்தக பையை முதுகில் தொங்க விடுவது என்பது சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கி விட்டன. புத்தக சுமை பின்னால் இழுக்க அதனை எதிர்கொள்ள மாணாக்கர்கள் குனிந்தவாறு அதனை ஈடு செய்கின்றனர். இது காலப்போக்கில் கூனல் விழும் நிலைக்கு இட்டு செல்கிறது என்கின்றனர் எழும்பு மருத்துவர்கள்.
இதெப்படி நாட்டின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாகும் என்கிறீர்களா..?
இன்றைய மாணவர்கள் தான் நாளைய நாட்டின் தலைவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள்,ராணுவ வீரர்கள் என வர விருக்கிறார்கள். இவர்களில் கூனல் விழுந்த வீரர்களை நாட்டின் பாதுகாப்பு பணிக்கு தேர்வாக வாய்ப்பேயில்லை. ஏனெனில், பாதுகாப்பு சட்ட விதிகளின் பிரகாரம் கூனல் ஒரு ஊனமாக கருதப்படுகிறது என்பதே காரணம்.
கூடுதல் தகவலுக்காக … பாடங்களை உற்று கவனிப்பதன் விளைவு கண் சார்ந்த நோய்களும் உண்டாவதால் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.