Najam கிரிக்கெட் கிளப் சீசன் 4 சவூதி ரியாத்தில் கடந்த 1 மாதகாலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டனர்.
கடந்த ஒரு மாதகாலம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12ஓவர்கள் நிர்ணியக்கப்பட்டன. இதில் அரைஇறுதி ஆட்டமாக சென்னை ஸ்டார்ஸ் அணியினரும்(அதிரையர்கள்) ரியாத் FLYERS அணியினரும் விளையாடினர்.
இதில் முதலில் மட்டை பணியை தேர்வு செய்த ரியாத் FLY brothers அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 12ஒவர்கலில் 8 விக்கட் இழப்பிற்கு 75ரன்கள் எடுத்து விளையாடி முடித்தனர்.
இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் கலம் இறங்கிய சென்னை ஸ்டார்ஸ் அணியினர் அணைத்து விக்கட்டு இழப்பிற்கு 12ஓவர்களில் 97 ரன்கள் எடுத்து 22ரன்கள் வித்யாசத்தியில் ரியாத் FLY brothers அணியை வெற்றி பெற்றது.
மேலும் இறுதி ஆட்டத்தில் Najam கிரிக்கெட் கிளப் அணியினரும் சென்னை ஸ்டார்ஸ் அணியினரும் (அதிரையர்கள்) இறுதி ஆட்டம் விளையாடினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 12ஓவர்கலில் Najam கிரிக்கெட் கிளப் அணியினர் முதலில் மட்டை பணியினை தேர்வு செய்த்தனர் இதில் 10விக்கட் இழப்பிற்கு najam கிரிக்கெட் கிளப் அணி 11.2 ஓவர்கலில் 62 ரன்கள் எடுத்து விளையாடினர். பின்பு இரண்டாம் கட்டம் நடைபெற்ற சுற்றில் களம்இறங்கிய சென்னை ஸ்டார்ஸ் அணி (அதிரையர்கள்) 7.2ஓவர்கலில் 4விக்கெட் இழப்பிற்கு 68ரன்கள் எடுத்து வெற்றி பெற்றன.