Home » அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!

அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!

by admin
0 comment

அதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன.

மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின்றன. இப்பகுதியில்சரியான முறையில் குப்பைகளை அகற்றாமலும், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததாலும் வீடுகளின் உள்ளேயும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி அதில் நோய்களை பரப்பும் டெங்கு, வைரஸ் கொசுக்கள் வளரவும் ஏதுவாக காணப்படுகிறது.

இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அதிகம் அதிகமாக வைரஸ் ஜுரம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரியாமல் இருப்பதனால் வேலை நிமித்தமாக பொது மக்கள் வீதியில் இறங்கி நடப்பற்கே அஞ்சி வீடுகளின் உள்ளேயே முடங்கி விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கவனிப்பாரற்று புறக்கனிக்கப்பட்டு கிடக்கும் ஆதம் நகரை மிதக்கும் எம் எஸ் எம் நகரை மீட்டு தர யாரேனும் முன் வருவார்களா?

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter