Monday, February 2, 2026

அதிரை பேரூராட்சியின் துப்புரவு வாகனங்களுக்கு GPS கருவி… அசத்தும் சுகாதார ஆய்வாளர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பொதுசுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் 4 வாகனங்களுக்கும் GPS பொருத்தும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் அன்பரசன் செயல்படுத்தியுள்ளார்.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் வண்டி எடுக்கப்பட்ட நேரம், வண்டி எங்கு பணியாற்றி கொண்டிருக்கிறது, எவ்வளவு தூரம் ஓடியுள்ளது, வேகம் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வண்டி பயணிக்கிறது, இன்ஜின் எவ்வளவு மணி நேரம் ஆனில் உள்ளது, எந்த தெருவில் குப்பை அள்ளிக்கொண்டிருக்கிறது, எத்தனை முறை குப்பை சேகரிக்கும் இடத்திற்கு வண்டி வந்து சென்றது, வண்டியில் உள்ள பேட்டரி போன்ற முக்கியமான பொருட்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காகவும் மற்றும் பணியாளர்களின் பணியை தீவிரமாக கண்காணிப்பது போன்ற முக்கியமான அம்சங்களை இந்த GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த GPS ட்ரேக்கிங் சிஸ்டம் சுகாதார ஆய்வாளர் அன்பரசனின் கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அவர் எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது. பொதுசுகாதார பணியில் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியுள்ள சுகாதார ஆய்வாளர் அன்பரசனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சுகாதார ஆய்வாளர் திரு. அன்பரசன்
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img