79
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.
மல்லிப்பட்டிணம் பகுதிகளில் பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையின் மூலம் முதியவர்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த லாட்டரி விற்பனையை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது என்றும்,அவர்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறதோ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாவட்ட அதிகாரிகள் உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.