மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்துள்ளார்.
இந்த அரசுக்கு எதிராக உடனே நம்பிக்கை வாகெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது பாஜக சார்பில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக 4 முக்கிய வழிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
அவை,
1) நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
2) நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற கூடாது. சட்டசபைக்குள் அனைவர் முன்பாகவும், வெளிப்படையாக வாக்குப்பதிவு நடத்திதான், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவிக்க வேண்டும்.
3) இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பதால், தொலைக்காட்சிகளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை நேரலையில் காட்ட வேண்டும்.
4) இப்போதைய சபாநாயகரை தவிர்த்துவிட்டு, இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகத்தான் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.