Friday, February 6, 2026

தென் இந்தியாவில் முதன்முறையாக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதூரியா ஆகியோர் சுகோய் விமானத்தை தஞ்சை விமானப்படை தளத்திற்கு அர்ப்பணித்தனர். அப்போது விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தண்ணீரை பீய்ச்சியடித்து சுகோய் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்துக்கு ஏவுகணை தாங்கிய அதிநவீன சுகோய் – 30MKI விமானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுகோய் விமானத்தைக் கொண்டுள்ள 12வது தளம் என்ற பெருமையை தஞ்சை விமானப்படைத்தளம் பெற்றுள்ளது. இதில் 11 விமானப்படை தளங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் இருக்கும் நிலையில், முதன்முறையாக தென் இந்தியாவில் சுகோய் போர் விமானம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img