5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அவற்றை பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
