197
CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் இன்றைய ஷாஹீன் பாக் போராட்ட அரங்கில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீஃப், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயலாளர் யாசிர் அரஃபாத் இம்தாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகபூபதி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.