அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபர் தி.சா. புருசோத்தமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய நகரத் துணைச் செயலாளர் முருகன் ராஜ் மற்றும் இளைஞர் மன்ற தலைவர் சரண்ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தளின்படி சமூக போராளிக்கு சமூக இடைவெளி கடைபிடித்து மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது.