50
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளை(19.4.2020) ஞாயிறு கிழமை அனைத்து கடைகளையும் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு.
கொரோனாவின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதியளித்து இருக்கிறது.
ஞாயிறு கிழமை மருந்தகங்கள் தவிர மளிகை கடை,காய்கறி கடை இறைச்சி கடை போன்றவைகளை அனைத்தையும் அடைத்து,பொதுமக்களும் வெளியே வருவதை தவிர்த்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.