Sunday, February 1, 2026

மே 3 வரை இன்டர்நெட் இலவசமா.? உண்மை தான் என்ன.?

spot_imgspot_imgspot_imgspot_img

மே 3-ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். ஆங்கிலத்தில் இதனை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் மே 3-ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாகவும், அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று ஒரு தகவலும், ஒரு லிங்கும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்த பத்திரிகை தகவல் பணியகம் (PIB) , தொலைத்தொடர்புத்துறை சார்பில் மே 3ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்காக எந்த லிங்கையும் அரசு அறிவிக்கவில்லை என்றும், அது தவறனாது மற்றும் மோசடி கும்பலின் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...
spot_imgspot_imgspot_imgspot_img