66
அதிரையில் நாளை மின்தடை இல்லை! வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்.
அதிரையில் நாளையதினம் முழு மின்தடை செய்யப்பட இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், முழு மின்தடை என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே அதிரையில் நாளை மின்தடை இல்லை என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அசாதாரண சூழலில் வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.