உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்,சமாதனமும் உண்டாகட்டுமாக, இந்த மடலில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
கொரோனா ஊரடங்கினால் முடங்கி போய் இருக்கும் யாவும் மீண்டும் சரியாகிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.முன்னெப்போதும் இல்லாத சவால்களை இந்திய சமூகம் சந்தித்து வருகிறது.நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவமாக கருதப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனில் சிறிதேனும் அக்கறை இல்லாமல் பல உயிர்களை இழந்தபோதும் மத்திய அரசு அவர்களுக்கான தேவையையும்,வாய்ப்பையும் ஏற்படுத்தாமல் மூன்றாம் தர குடிமக்களாக கருதி ஒதுங்கிவிட்டது.
எந்தவித முன்னேற்பாடும் இன்றி பொதுமுடக்கத்தை அறிவித்த அரசு அதற்கான வழிமுறைகளை சரியாக கடைபிடித்ததாக பார்த்தால் இல்லவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.நாட்டு மக்கள் படும் துயரங்களை கண்டு கொள்ளாமல்,கொரோனா தொற்றை வைத்து மத அரசியல் செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்துவிதமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுத்திடாமல் வேடிக்கை பார்த்தது மத்திய,மாநில அரசுகள்.துன்பமும்,துயரமும் படும் அம்மகளுக்குடன் நாமும் துணை நிற்போம்.
மத அரசியல் செய்யும் மத்திய அரசின் போக்கை எதிர்த்து நிற்பதில் SDPI கட்சி என்றுமே முன்னணியில் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறருக்கு ரமலான் மாதத்தில் அதிகமாக உதவிட வேண்டும் என்ற உன்னதம் போற்றிய மாதத்தில் அதிகமான உதவிகளையும்,தேவைகளையும் இயலாதவருக்கும்,இல்லாதவர்களுக்கும்,வறியவர்களுக்கும் உதவிடுவோம்,பிறரின் அக மகிழச்சியை கண்டு நாமும் மகிழ்ந்திடுவோம்.
உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகளை SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
N.அகமது புகாரி.MBA
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
SDPI கட்சி.
SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி…
39