Thursday, March 19, 2026

அதிரை : IRCS புதிய நிர்வாகிகள் தேர்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கிளை நிர்வாகிகள் தேர்வு அதன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

IRCS உறுப்பினர்கள், ஆயுட்கால உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற தேர்வில் அதிரை கிளை சேர்மனாக மரைக்கா கே இதிரீஸ் அஹமது ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதில் கடந்த முறை தேர்வான சிலரின் பணிக்காலம் முடிவுற்ற நிலையில் புதிய நிர்வாகம் அமைக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் படி பின்வரும் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

துணை சேர்மனாக N. ஆறுமுகசாமியும், செயலாளராக சூப்பர் அப்துல் ரஹ்மான் அவர்களும், பொருளாளராக Z மன்சூர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆலோசனை துணைக்குழு உறுப்பினர்களாக பேராசிரியர் கணபதி MA,MPhil,Phd, வழக்கறிஞர் A. முனாஃப், H. முஹம்மது இப்ராஹிம் MBA,DACA, முனைவர். ஹாஜா அப்துல் காதர் MSC,MPhil, Phd ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுடன் 12 செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியல், தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக கொரோனா நோயால் இறந்தவர்களுக்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img