அதிராம்பட்டினம் CMPலைனை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆபீதீன். கூலி தொழிலாளியான இவர் ஹோட்டல்களில் சப்ளையர் பணி செய்து வந்தார். அவருக்கு பக்க வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே அவரது மனைவி சபுரா அம்மாள் (வயது 40). இவருக்கு மகள் ஒன்று உள்ளார்.
இந்நிலையில் சபுராவின் கற்ப பையில் கட்டி உருவாகி, வலியால் துடித்த அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தற்போது கொரோனா காலம் என்பதால் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில் மீண்டும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த பெண் மருத்துவர், மூன்று நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் ஏழை குடும்பமான இவருக்கு போதிய அளவு பொருளாதாரம் இல்லாததால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே தயாள குணமுடைய சகோதரர்கள் பின்வரும் வங்கி கணக்கிற்கு தங்களால் ஆன பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கிட வேண்டுகிறோம்.



