60
நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வாவுக்கு பெயர் பெற்றது. இதன் உரிமையாளராக இருப்பவர் ஹரிசிங். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலை குறித்து நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.