54
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சத்ய விஜயன் தலைமை தாங்கினார்,பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார்.நினைவஞ்சலி கூட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.மேலும் கருணாநிதியின் தமிழ் பற்று,ஹிந்தி போராட்டம்,சமூக நீதி கொள்கை ஆகியவை குறித்து நினைவு கூர்ந்தனர்.
இதில் திமுக பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.