அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் சார்பாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்றியதை தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணிகள் அதிரையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களும்,மாற்றங்களும் அரங்கேறத் துவங்கின.கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக பேருந்து நிலையத்தில் பட்டாசு கொளுத்தி,இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் அதிமுக நகர கழக செயலாளர் A.பிச்சை,நகர துணைச் செயலாளர் MA தமீம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.