66
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தீவிர புயலாக மாறியது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் புயலின் முன்பகுதி கரையை கடக்க துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணி ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.