Sunday, February 1, 2026

தீவிர களப்பணியில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அன்றாடம் பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், பொறுப்பற்ற சிலரால் விதிகளில் விசி எரியப்படும் குப்பைகள் சிதறி துர் நாற்றம் விசி நோயை பரப்பும் அபாயம் இருந்து வந்தன.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாலர்கள் தன்னார்வ அமைப்பினர் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கேட்பாரில்லை.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு புதிதாக வந்துள்ள செயல் அலுவலர் பரமேஸ்வரி, மற்றும் சுகாதார ஆய்வாலர் தமிழ்வாணன் ஆகியோரின் தீவிர களப்பணியால், பல்வேறு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைக்களை போர்கால அடிப்படையில் சுத்தம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு குப்பைகளை தரம் பிரித்து வீதிக்கு வரும் குப்பை வண்டியில் செலுத்தினால் மட்டுமே சுகாதாரம் மேம்படும், இதனை விடுத்து வீட்டில் இருக்கும் குப்பைகளை விதிகளில் வீசி எரிவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுக்கு பொதுமக்களும் ஆளாக நேரிடும் எனவே பொதுமக்கள் தங்கள் விடுகளில் சேமிக்கும் குப்பைகளை தரம் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

தங்கள் வீடுகளுக்கு குப்பை பெறுவதற்கு தெரு வாரியாக துப்புரவு தொழிலாளர்கள் விரைவாக நியமிக்க உள்ளனர் என்றும் அதுவரை பொதுமக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க செயல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img