59
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொறுத்தவரை நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டு மிதமான மழையும் பெய்தது. இன்று(04/01/2021) காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி அதிராம்பட்டினத்தில் 36.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.