மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவாக பேசியும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள், கல்யாணராமனை கண்டித்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்யாணராமனை கண்டித்து ஆவணத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு ஆவணம் கிளை செயலாளர் யூசுப் தலைமை வகித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர்கள் ஆவணம் ரியாஸ், ‘இந்திய விடுதலை யுத்தமும் இஸ்லாமியர்கள் சிந்திய இரத்தமும்’ என்ற தலைப்பிலும், அன்சார் MISC, ‘மாமனிதர் நபிகள் நாயகம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
இறுதியாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



