57
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லிப்பட்டினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
மல்லிபட்டினம் கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ் திமுக கொடியை ஏற்றினார்.நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், கிளை செயலாளருமான ஹபீப் முகமது தலைமை வகித்தார்.கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், திமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.