தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையும்,பலத்தகாற்றும் வீசி வருகிறது.மேலும் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெத்ர்மேன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் அவ்வப்போது மின்சாரத்தை நிறுத்தி வருகிறது.காற்றின் வேகமாக அதிகரிப்பதன் காரணமாக மின்கம்பிகள் விழும் சூழல் இருப்பதால் அதிரை பொதுமக்கள்,சிறுவர்,சிறுமிகள் என அனைவரும் எச்சரிக்கையாகவும்,விழிப்போடும் இருக்கவேண்டும்.
மேலும் மழை நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் அதிரை பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதன் மூலம் பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம்.அதிகமான நோய்களும் மழைக்காலங்களில் பரவும்,ஆதலால் குடிநீர் நன்கு கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்.மழைக்காலங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பலவிதமான சிரமங்களிலும்,பாதிப்புகளிலும் இருந்து தற்காத்து கொள்ளலாம்!!!