தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த தனது மகனின் முகத்தை கடைசி முறையாக பார்க்க நினைத்த தாய் மற்றும் குடும்பத்தினர்கள் தஞ்சை தெற்கு மாவட்டம் #அதிராம்பட்டினம் SDPI கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பாலசுப்பிரமணியத்தின் உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்த அதிரை SDPI நிர்வாகிகள் சவூதி அரேபியாவில் தமிழர்களின் நலன் சார்ந்த சேவைகளை செய்துவரும் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் அல்ஹசா பொறுப்பாளர் ரியாஸை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததுடன் தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த பாலசுப்ரமணியனின் உடலை தாயகத்திற்கு 2021 ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் சென்ற விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி நாடினர் உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி மற்றும் தொகுதி செயலாளர் பெரோஸ்கான் சதாம் உசேன் அன்சர்ருதின் விமான நிலையம் சென்று அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல சட்ட ரீதியான உதவிகளை செய்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர் இதனையடுத்து அதிரை நகர தலைவர் அஹமது அஸ்லம்,தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் சேக் தாவூது ஆகியோர் அதிராமபட்டினம் எடுத்துச்சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்..
அவருடைய குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்து SDPI கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா,மாவட்ட பொருளார் சேக் தாவூத்,நகர செயலாளர் சாகுல் ஹமீது,நகர தலைவர் அகமது அஸ்லம் ஆகியோர் ஆறுதல் கூறினர்.குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.