சென்னையில் அதிகளவில் பரவும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக சென்னை அண்ணா நகரில் இருக்கும் பள்ளிவாசலை முழுமையாக கொரோனா சிசிச்சை மையமாக மாற்ற அந்த பள்ளியின் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து உள்ளது.
இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டியுள்ள படி செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது.
முற்றிலும் இலவச சேவையாக இயங்க உள்ள இந்த சிகிச்சை மையத்தில் தேவைக்கு ஏற்ப படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. மேலும் ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.




