Home » ஊர்சுற்றினால் கோவிட் டெஸ்ட் ! அதிரையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி !!

ஊர்சுற்றினால் கோவிட் டெஸ்ட் ! அதிரையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி !!

by
0 comment

அதிரையில் ஊரடங்கை மீறி ஊர்சுற்றும் இளைஞர்களே !கொரோனா பரிசோதனைக்கு தயாரா?

கொரோனா கால ஊரடங்கில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏதும் இல்லததால் முழு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அவசர தேவை என பொய் கூறி திரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டம் தீட்டி வருகிறார்கள் !

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயின் தாக்கத்தால் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.

ஆனால் அதிரை நகரில் அத்தியாவசிய தேவையின்றி பொய்யான தகவல்களை கூறி இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வருகிறார்கள் என்ற குற்றசாட்டை அதிரை காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் நாளை மறுநாள் முதல் அவசிய தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்க்காக அதிராம்பட்டிணம் அரசு மருத்துவமனையில் போதிய அளவு கொரோனா பரிசோதனை எக்யூப்மெண்ட்கள் வரவலைக்கப்பட்டு தயாராக இருக்கிறது.

நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேவையற்ற வெளி சுற்றலை அறவே இளைஞர்கள் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் நபர்கள் அதற்கான சான்றை காவல்துறை,சுகாதார அதிகாரிகளிடம் கான்பிப்பது கட்டாயமாகும்.

இது தவிர இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஓட்டுனர் உரிமம், வாகன காப்பீடு உள்ளிட்டவற்றுடன் முக கவசம், தலை கவசம் அணிந்து செல்வது கட்டாயமாகும்.

மேற் கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் கூட சட்ட நடவடிக்கக்கு உட்படுத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனவே தேவையின்றி வெளியில் சுற்றி சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இளைஞர்களை பெற்றோர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என அறிவுருத்துகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter