Sunday, February 1, 2026

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு புறக்கணிப்பு ~ வார்டு உறுப்பினர் பக்கர் குற்றச்சாட்டு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் சரபேந்திர்ராஜன்பட்டிணம், ஊராட்சியில் மல்லிப்பட்டினம் நான்காவது வார்டு பகுதி ஊராட்சி மன்றத்தினால் புறக்கணிக்கப்படுவதாக அந்த வார்டு உறுப்பினர் அபுபக்கர் குற்றச்சாட்டு.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் அபுபக்கர் தெரிவிக்கையில்,என்னுடைய வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பம் சேதம் அடைந்து கீழே விழக்கூடிய சூழல் இருந்தது, அதனை மாற்றி தர ஊராட்சியிடம் முறையிட்டேன்,ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நேரடியாக அந்தப் பகுதி பொதுமக்களுடன் இணைந்து உதவி செயற்மின் பொறியாளர் தொடர்பு கொண்டவுடன், உடனடியாக அந்த கம்பத்தை மாற்றி அமைத்தார்.

மேலும் மின்கம்பத்திற்கு அருகில் செல்லக்கூடிய குடிநீர் பைப்லைன் ஒன்று பழுதடைந்து விட்டது அதிலிருந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது,இந்த குழாய் உடைப்பு காரணமாக ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை என்றும்,இதனால் மின்கம்பம் சாயும் நிலை ஏற்படும் என்பது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி செயலர் அவர்களிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதேபோல ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் அடிக்கும்பணி நடைபெற்றது அதில் எங்களுடைய 4-வது வார்டு புறக்கணிக்கப்பட்டு இதுவரை எந்தவித சுகாதார பணிகளையும் மேற்கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img