Home » ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முக்கிய அறிவிப்பு!

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முக்கிய அறிவிப்பு!

0 comment

அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா “நெகட்டிவ்” சர்ட்டிபிகேட் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்தபோதிலும், நபர்கள் வெளி மாவட்டத்துக்கு சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து வருகிறது. ஒருநாளைக்கு 50 பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனினும் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

நீலகிரிக்கு இருபுறமும் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உள்ளன. இந்த 2 மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளன. அதிலும் கேரளாவில் 3வது அலை பரவல் ஆபத்தும் உள்ளது. எனவே நீலகிரிக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது : கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு சீட்டுடன் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

இல்லை எனில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் இல்லையெனில் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் சுய முகவரி சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லை எனில் அபராதம் விதிக்கப்பட்டு நீலகிரிக்கு வர அனுமதி மறுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter