Home » 15 நாட்களில் நல்ல செய்தி வரும் ! காத்திருக்கும் அதிரை பயணிகள்..!

15 நாட்களில் நல்ல செய்தி வரும் ! காத்திருக்கும் அதிரை பயணிகள்..!

0 comment

திருவாரூர் – காரைக்குடி குறுகிய இருப்பு பாதையைஅகல பாதையாக மாற்ற அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் கட்சிகள்,இயக்கங்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தன.

இதன் பலனாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசானது மனமிறங்கி அகலப் பாதைக்கான பணிகளை தொடங்கியது.

இருப்பினும் இதற்க்காக போதிய நிதிகளை ஒதுக்கவில்லை.

அவ்வபோது சிறு தொகைகளை மாத்திரமே ஒதுக்கி கண்துடைப்பு பணிகளை மேற்கொண்டது.

அதன்பின்னர் வந்த பாஜக அரசு இவ்வழித்தடத்தில் பூர்வாங்க பணிகளை முடுக்கி விட்டது.

பணிகள் 100%பணிகள் நிறைவடைந்தும் கேட் கீப்பர்களை இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கிறது.

இதனிடையே திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு இரயில் இவ் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங்கில் இரயிலை நிறுத்தி கேட்மூடி திறந்து செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அதிராம்பட்டிணம் இரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சார்பில் இரயில்வே பொது மேலாளர் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி, தொழிலதிபர் எம் எஸ் ஷிஹாபுதீன், சமூக ஆர்வலர் அப்துல் ரஜாக், உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர் 15 நாட்களில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தாக அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter