Sunday, February 1, 2026

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை : முதல்வரின் முடிவுக்கு முரண்படும் சட்ட அமைச்சர்! ஜவாஹிருல்லாஹ் காட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட மனித நேய மக்கள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் MH ஜவாஹிருல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸிற்கு  பேட்டி அளித்தார். அப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து  நெரியாளர் ஹசன் வகா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜவாஹிருல்லாஹ், பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி  உள்ளிட்ட 7 பேர் விடுதலையுடன் 10ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறை கைதிகளையும் விடுதலை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதனிடையே தேசத்துரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தவிர 700 கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சமீபத்தில் தமிழக சட்ட துறை  அமைச்சர் ரகுபதி தெரிவித்தது குறித்து ஜவாஹிருல்லாஹிடம் நெறியாளர் ஹசன் வகா வினாக்களை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ஜவாஹிருல்லாஹ், சட்டத்துறை அமைச்சரே குழப்பத்தில் இருக்கிறார் என்றும், சிறை வாசிகள் விடுதலை விவகாரத்தில் முதல்வரே முடிவெடுப்பார் என்றும் கூறினார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழக சட்டத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என காட்டமாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img