அதிரை நகராட்சி வார்டு மறுவரையரையில் மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் கண் அசைவுக்கு எதுவாக அவசர கதியில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில வார்டுகளில் மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குளறுபடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையரைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு வருகிறது.
Big breaking அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி! உயர்நீதிமன்றத்தில் வழக்கு!! நாளை விசாரணை!
230
previous post