அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை எப்படியேனும் அமைத்தே தீர வேண்டும் என ஆளும் திமுக-வினர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். ஏற்கனவே காயல்பட்டினத்தில் இருக்க கூடிய காஸ்டிக் சோடா தொழிற்சாலையால் புற்றுநோய், கண் எரிச்சல், சுவாச கோளாறு, சரும பிரச்சனை, நிலத்தடிநீர் மாசு, உப்பள தொழில் பாதிப்பு உள்ளிட்ட இடர்பாடுகளை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனிடையே காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அதிரையில் அமைப்போம் என கடந்த 2016, 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக அறிவித்தது. இருப்பினும் பாசிச கூட்டணி வென்றுவிட கூடாது என கருதிய அதிரை மக்கள், திமுக-வை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற செய்தனர். தற்போது, அதனை காஸ்டிக் சோடா தொழிற்சாலைக்கு மக்கள் ஆதரவு என்ற போர்வையில் சிலர் விஷம பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்க கூடிய காயல்பட்டினத்தில் இருக்கும் அதே காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அதிரையிலும் அமைக்க வேண்டும் என திமுக புள்ளிகள் துடிப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதனை எதிர்த்து பேசினால் கட்சியின் மாவட்ட, நகர, கிளை பதவிகள் பிடுங்கப்பட்டுவிடும் என்பதால் வாய் திறக்காமல் மங்குனிகளாக உள்ளனர் உள்ளூர் புள்ளிகள். தனது மனைவி, மகன், பேரபிள்ளைகள், சமூதாய மக்களின் ஆரோக்கியம் பற்றியெல்லாம் சிந்தித்து செயல்படுபவருக்கு மு.க.வில் இடமில்லை என்பது வரலாறு. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதால் மட்டும் அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைத்துவிட முடியாது. நகராட்சி மன்றத்தின் அனுமதி தேவை. எனவே இந்த இடத்தில் உங்களின் வாக்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்பம் என்பதற்காக சந்ததியை சிதைக்கும் சின்னத்திற்கு வாக்களித்து தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள், குடும்பம் என கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வருவோரிடம் உயிர்கொல்லி காஸ்டிக் சோடா தொழிற்சாலை குறித்து கேள்வி எழுப்புங்கள். இது வெறும் கவுன்சிலர் பதவி அல்ல, நம் சந்ததிகளை ஆரோக்கியமாக வாழ வைக்க போகும் பொறுப்பு.
அதிரை மக்களுக்கு நெருங்கும் பேராபத்து! இனி உயிர் வாழ்வதே சவால் தான்!!
55