Wednesday, March 4, 2026

அதிரை 6வது வார்டில் மும்முனை போட்டி : உச்சகட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் எதிர்வரும் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அதிரை நகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

27 வார்டுகளை கொண்டுள்ள அதிரை நகராட்சியில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் குறிப்பாக 6வது வார்டு அதிரை மக்களின் ஸ்டார் வார்டாக கருதப்படுகிறது.

இந்த 6வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஜபீன் இமாமுதீன், திமுக வேட்பாளர் கனீஸ்பாத்திமா அகமது காமில், SDPI கட்சி வேட்பாளர் மர்லியா அகமது அஸ்லம், தமுமுக அதரவு பெற்ற சுயேட்ச்சை வேட்பாளர் A.H.சௌதா அஹமது ஹாஜா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷஃபிக்கா முஹம்மது இப்ராஹீம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஹ்மத்து நாச்சியா இப்ராஹீம் என 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஸ்டார் வார்டாக கருதப்படும் அதிரை 6வது வார்டில் சுயேட்ச்சை வேட்பாளர் A.H.சௌதா அஹமது ஹாஜா, SDPI கட்சி வேட்பாளர் மர்லியா அகமது அஸ்லம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷஃபிக்கா முஹம்மது இப்ராஹீம் ஆகியோருக்கிடையில் மிகக் கடுமையான மும்முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாளையுடன் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில் உச்சகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் அனைவரும் பம்பரமாய் சுழல்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img