அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் பரப்பரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் 6வது வார்டில் போட்டியிடும் சஃபிக்கா இப்ராஹிம் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்து வருகிறார். தேர்தலுக்கு முன்னரே மக்களின் குறைகளை தனித்தனியாக படிவம் கொடுத்து தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் அதனை சரிசெய்து தருவதாக உறுதியளித்து 6வது வார்டு மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார் ஷஃபிக்கா இப்ராஹிம் அவர்கள். தேர்தலுக்காக அடுத்தவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி ஓட்டுக்கேட்கும் சிலரின் மத்தியில் மக்களின் குறைகளை கேட்டறிந்து இதுபோன்ற புது முயற்சி எடுக்கும் இப்படிபட்ட வேட்பாளர்கள் தான் முக்கியம் என்றும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கான இது ஒரு நல்ல முயற்சி என்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
அதிரை மக்களின் செல்வாக்கை பெறும் 6வது வார்டு வேட்பாளரின் செயல்..!!
86