அதிரை நகராட்சி மன்ற தலைவியாக எம்.எம்.எஸ் தாஹிரா அம்மாளை திமுக தலைமை தேர்வு செய்துள்ளது. அதேபோல் நகரமன்ற துணை தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகத்திற்கு கூட்டணி தர்மம் அடிப்படையில் திமுக தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் முடிவை அவமதிக்கும் விதமாக அதிரை நகர திமுக துணை செயலாளர் அன்சர் கான் பேசி வெளியிட்டிருக்கும் ஆடியோ வாட்ஸ்அப்-ல் வைரலாகி வருகிறது. அதில் பேசும் அன்சர் கான், நகர்மன்ற துணை தலைவி பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்த மு.க.ஸ்டாலினின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் முக்கிய புள்ளியை குறிக்க சகுனி என்ற வார்த்தையை அடிக்கடி அதில் பயன்படுத்தும் அவர், இராம. குணசேகரன் தான் நகராட்சியின் துணை தலைவர் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மு.க.ஸ்டாலினை அவமதித்த நகர துணை செயலாளர் அன்சர் கானை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
கொடுத்ததை திரும்ப பறிக்கும் அதிரை திமுக! அவமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின்!! அதிரையில் உச்சக்கட்ட பரபரப்பு!!
95
previous post