அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுச்சேரியில் பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைப்பு,மற்றும் புத்தகங்கள் கிழிப்பு.
புதுச்சேரி ஆம்பூர் சாலையில் அமைந்துள்ள முவஹிதியா பள்ளிவாசலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.டிசம்பர் 6 அன்று இந்துத்துவ அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம் தலைவர்களையும்,முஸ்லீம்களையும் கடுமையாக விமர்சித்து தூண்டியும் விட்டனர்.இதனுடைய விளைவாக நேற்று சமூக விரோத கும்பல்கள் பள்ளிவாசல் பூட்டை உடைத்து பல்வேறு கோப்புகளையும்,புத்தகங்களையும் கிழித்துள்ளனர்.
இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் தமுமுகவின் மாவட்ட தலைவர்கள் அங்கு வந்து நிலைமையை கேட்டுவிட்டு புதுச்சேரி முதல்வரை சந்தித்தனர்.இதற்கு முதல்வர் உடனே நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.