Home » 5 கிலோ மீட்டர் நடைப்போட்டி – முதலிடம் பிடித்த அதிரையர் !

5 கிலோ மீட்டர் நடைப்போட்டி – முதலிடம் பிடித்த அதிரையர் !

by
0 comment

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டு நடந்த தடகள போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 5கிலோ மீட்டர் தூர அளவிலான நடை போட்டியில் அதிராம்பட்டினம் வழக்கறிஞர் MMS சஹாபுதீன் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தார்.

தமிழக அளவிலான இப்போட்டியில் அதிரையர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சஹாபுதீன் கூறுகையில், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடை பயிற்ச்சியை தினமும் செய்து வருவதால் தேகம் வலுப்படும் என்றும் இன்றை காலச் சூழலுக்கு நடைப்பயிற்சி இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றார்.

சாதிப்பதற்க்கு வயது என்றைக்கும் தடையாக இருக்க கூடாது என்றும்,மனதை ஒருமுகப்படுத்தி நிலையான தேகத்தை கொண்டால் எதுவும் தடையாக இருக்காது என்றார்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு அதிராம்பட்டிணம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட ஜமாத்தார்கள்,கட்சி பிரமுகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter